டெஸ்ட் கிரிக்கெட்: முதல் விக்கெட் கீப்பராக உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் இந்த சாதனையை படைத்தார்.;

Update:2025-07-24 14:06 IST

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா (19 ரன்), ஷர்துல் தாக்குர் (19 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

இதில் ரிஷப் பண்ட் 24 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் எந்த ஒரு விக்கெட் கீப்பரும் சொந்த மண்ணை தவிர்த்து வெளிநாடுகளில் டெஸ்டில் ஆயிரம் ரன்கள் அடித்ததில்லை.

Tags:    

மேலும் செய்திகள்