ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் இந்தியா ஏ..?
ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி தொடங்க உள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் அவரை தேர்வு செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.