இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.;

Update:2025-07-21 05:03 IST

மான்செஸ்டர்,

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியின் போது முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான்.

எனவே அவர் இந்த போட்டி தொடரில் இருந்து விலகுவார் என்று கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ் குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்