வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர்; ரிஷப் பண்ட் ஆடுவது சந்தேகம்..?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.;

Update:2025-09-23 03:00 IST

image courtesy:PTI 

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத்திலும், 2வது போட்டி டெல்லியிலும் நடக்கிறது.

இந்நிலையில் , வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் இடம் பெறுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து தொடரின் போது ரிஷப் பந்த் கால் விரலில் காயத்தை சந்தித்தார். இதனால் அந்த தொடரின் கடைசி போட்டியில் இருந்து விலகிய அவர், காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் அவரது காயம் இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் இல்லாத சூழலில் துருவ் ஜுரெல் அணியில் விக்கெட் கீப்பராக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்