முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப்போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 242 ரன்களில் ஆல் அவுட்
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.;
கராச்சி,
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா(2 ஆட்டத்திலும் தோல்வி) வெளியேறியது.
இதனையடுத்து கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் இறுப்போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பகார் ஜமான் 10 ரன்களிலும், பாபர் அசாம் 29 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த சாத் ஷகீல் 8 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் நியூசிலாந்து பவுலர்கள் தடுத்தனர்.
இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரிஸ்வான் (46 ரன்கள்) சல்மான் ஆகா (45 ரன்கள்) மற்றும் தயாப் தாஹிர் (38 ரன்கள்) சிறப்பாக விளையாடி அணியை 200 ரன்களை கடக்க உதவினர்.
49.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 242 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஒ ரூர்க் 4 விக்கெட்டுகளும், பிரெஸ்வெல் மற்றும் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 243 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்க உள்ளது.