ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: யுஏஇ அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நாளை தொடங்குகிறது.;

Update:2025-08-28 08:11 IST

image courtesy:ICC

துபாய்,

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் நாளை (29-ம் தேதி) தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான யுஏஇ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது வாசீம் தலைமயிலான அந்த அணியில் ஹைதர் அலி, ஜுனைத் சித்திக் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

யுஏஇ அணி விவரம் பின்வருமாறு:

முகமது வாசீம் (கேப்டன்), ஹைதர் அலி, ராகுல் சோப்ரா, ஈதன் டிசோசா, முஹம்மது பரூக், முஹம்மது ஜவதுல்லா, ஹர்ஷித் கவுஷிக், ஆசிப் கான், ரோஹித் கான், சாகிர் கான், துருவ் பராஷர், அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, ஜுனைத் சித்திக், முஹம்மது ஜோஹைப்.

Tags:    

மேலும் செய்திகள்