பிலிப்ஸின் அட்டகாசமான 'கேட்ச்'சால் ஆட்டமிழந்த விராட்...அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் - வீடியோ
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டம் விராட் கோலிக்கு 300வது ஒருநாள் போட்டி ஆகும்;
Image Courtesy: X (Twitter)
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இதில் கில் 2 ரன்னிலும், ரோகித் 15 ரன்னிலும், அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இதன் காரணமாக இந்திய அணி 30 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர். இந்த போட்டி விராட் கோலிக்கு 300வது ஒருநாள் போட்டி ஆகும். இந்த ஆட்டத்தில் ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஹென்றி பந்துவீச்சில் பிலிப்ஸின் அட்டகாசமான கேட்ச்சின் காரணமாக அவுட் ஆனார்.
விராட் கோலியின் 300வது ஆட்டத்தை காண அவரது மனைவி அனுஷ்கா சர்மா துபாய் வந்திருந்தார். இந்நிலையில், கோலியின் விக்கெட்டை பார்த்து அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.