பீல்டிங்கில் அசத்திய விராட், ஸ்ரேயாஸ்.. வீடியோ வைரல்

இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-25 14:24 IST

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக கேட்ச் பிடித்தனர். மேத்யூ ஷார்ட் வேகமாக அடித்த பந்தை விராட் கோலி அற்புதமாக கேட்ச் பிடித்து மெயிசிலிர்க்க வைத்தார்.

அதேபோல் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பின்னோக்கி ஒடி சென்று ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்