கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிளப் அணியான ஹாம்ஷைரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.;
image courtesy:BCCI
லண்டன்,
8 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் யு.ஏ.இ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் அணியை விட்டு வெறியேறிவிட்டார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில், ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவில்லை. இந்தியாவில் தான் இருக்கிறார்கள், தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அழைத்துக் கொள்வோம் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள், மும்பையில் தங்கி பயிற்சி மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிளப் அணியான ஹாம்ஷைரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த சீசனில் அந்த அணியின் கடைசி 2 ஆட்டங்களில் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.