பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.;
image courtesy: ICC
கயானா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணியில் ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-
ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங்,எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரதர்போர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்