வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.;

Update:2025-10-10 16:19 IST

கோப்புப்படம்

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (ஒருநாள், டி20) ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அத்தானஸ், அக்கீம் அகஸ்டீ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டீன் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கோ, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோடி, கேரி பியரே, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அத்தானஸ், அக்கீம் அகஸ்டீ, ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அஹேல் ஹொசைன், அமீர் ஜாங்கோ, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோடி, ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ராமன் சிம்மன்ஸ். 

Tags:    

மேலும் செய்திகள்