'அவன் என்ன போடுறான்னே..' கருண் நாயருடன் தமிழில் பேசிய வாஷிங்டன் சுந்தர்.. வீடியோ வைரல்

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.;

Update:2025-08-01 19:43 IST

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் 'டிரா' வில் முடிந்தது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் (2 ரன்) அட்கின்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.அடுத்து தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இறங்கினார். சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (14 ரன், 40 பந்து, ஒரு பவுண்டரி) கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் போல்டானார்.

இந்தியா 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அதனால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மழை கொட்டியதால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது கேப்டன் சுப்மன் கில் (21 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். தொடர்ந்தது. சாய் சுதர்சன் 38 ரன்களில் (108 பந்து, 6 பவுண்டரி) விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்திடம் சிக்கினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (9 ரன்), துருவ் ஜூரெல் (19 ரன்) நிலைக்கவில்லை.

தொடர்ந்து கருண் நாயர் , வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து விளையாடினர் . சிறப்பாக விளையாடிய கருண் நாயர் அரைசதமடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும்ம் , வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி மேற்கொண்டு 20 ரன்களுக்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் - கருண் நாயர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியபோது தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டாங் வீசிய ஒரு ஓவரை கருண் நாயர் எதிர்கொண்டார்.

அப்போது மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், கருண் நாயரை நோக்கி, "அவன் என்ன பந்து போடுறான்னே தெரிய மாட்டிங்கிது" என்று தமிழில் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்