நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? கெய்க்வாட் பதில்
ருதுராஜ் கெய்க்வாட் தற்போது புச்சிபாபு கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.;
image courtesy:PTI
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ருதுராஜ் கெய்க்வாட். ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். சிஎஸ்கே அணியில் விளையாடுவதன் மூலம் தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்.
இதில் கெய்க்வாட் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மராட்டியம் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சூழலில் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
அதில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கெய்க்வாட், ‘டிரெண்ட் போல்ட்’ என பதிலளித்தார்.