தொடரை வெல்லப்போவது யார்..?: 3வது டி20 போட்டியில் இலங்கை - வங்காளதேசம் இன்று மோதல்
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.;
Image Courtesy: @OfficialSLC / @ICC
கொழும்பு,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கையும், 2வது ஆட்டத்தில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், டி20 தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.