மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்... இங்கிலாந்து அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு நாட் ஸ்கிவர் பிரண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.;
Image Courtesy: @englandcricket
லண்டன்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நாட் ஸ்கிவர் பிரண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம்: எம் ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், ஆமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), பைஜ் ஸ்கோல்பீல்ட், லின்சி ஸ்மித், டேனி வயட்-ஹாட்ஜ், இஸ்ஸி வோங்.