மகளிர் கிரிக்கெட்; இலங்கையில் முத்தரப்பு ஒரு நாள் தொடர் - இந்திய அணி பங்கேற்பு
லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.;
image courtesy:twitter/@BCCIWomen
கொழும்பு,
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் இலங்கையுடன் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளும் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த ஆட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி முதல் மே 11-ந்தேதி வரை நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பகலில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.