மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.;

Update:2025-10-13 14:38 IST

Image Courtesy: @ICC

விசாகப்பட்டினம்,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகின்றன. உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 4வது இடத்திலும், வங்காளதேசம் 6வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்