மகளிர் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.;

Update:2025-10-26 15:26 IST

மும்பை,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில், நவிமும்பையில் இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் இந்தியா , வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், மும்பையில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டதால் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.  அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது 

இந்தியா:

பிரத்திகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.

வங்காளதேச அணி:

சுமையா அக்டர், ரூபியா ஹைதர் ஜெலிக், ஷர்மின் அக்தர், சோபனா மோஸ்டரி, நிகர் சுல்தானா, ஷோர்னா அக்டர், ரிது மோனி, ரபேயா கான், நஹிதா அக்டர், நிஷிதா அக்தர் நிஷி, மருபா அக்டர்.


Tags:    

மேலும் செய்திகள்