உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2.25 கோடி பரிசு வழங்கிய மராட்டிய அரசு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-11-07 18:34 IST

மும்பை,

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் பரிசுகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற மராட்டியத்தை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ் ஆகிய 3 பேருக்கும் மராட்டிய அரசு தலா ரூ 2.25 கோடி ரொக்கப்பரிசு வழங்கியுள்ளது.

மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்திற்கு வந்த வீராங்கனைகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்து வாழ்த்தினார். மேலும், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்