இளம் கிரிக்கெட் வீராங்கனை புகார்.. யாஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதிவு

யாஷ் தயாள் மீது ஏற்கனவே பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார்.;

Update:2025-07-25 15:59 IST

image courtesy:PTI

அலகாபாத்,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் தற்போது அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மீது ஏற்கனவே உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

இந்த பரபரப்பு முடிவடைதற்குள் யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கிரிக்கெட்டில் தன்னை வளர்த்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக யாஷ் தயால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்