முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: ஜார்கண்ட் அணியிடம் தமிழகம் தோல்வி

ஜார்கண்ட் அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;

Update:2025-12-07 01:41 IST

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (டி பிரிவு) தமிழக அணி, ஜார்கண்டை சந்தித்தது. முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. குமார் குஷக்ரா 84 ரன்னுடனும் (48 பந்து), அனுகுல் ராய் 25 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழகம் தரப்பில் குர்ஜப்னீத் சிங், டி.நடராஜன், ராஜ்குமார் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்களே எடுத்தது. இதனால் ஜார்கண்ட் அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 64 ரன்கள் (42 பந்து) சேர்த்தார். கேப்டன் ஜெகதீசன் 20 ரன்கள் (17 பந்து) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜார்கண்ட் அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்து சூப்பர் லீக் சுற்றை உறுதி செய்தது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணி 4-வது தோல்வியை சந்தித்தது.

ஐதராபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (சி பிரிவு) புதுச்சேரி அணி 81 ரன் வித்தியாத்தில் பெங்காலுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது வெற்றியை பெற்றது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்