அடிக்கடி அப்பீல் செய்த குல்தீப்.. ரோகித் கொடுத்த ரியாக்சன்.. வீடியோ வைரல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.;

Update:2025-12-06 19:24 IST

விசாகப்பட்டினம்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அவரது பந்துவீச்சில் அடிக்கடி எல்பிடபிள்யூ அப்பீல் செய்து கேப்டன் கே.எல்.ராகுலிடம் ரிவியூ எடுக்க முறையிட்டார். கே.எல். ராகுல் ஸ்லிப் பகுதியில் பீல்டிங் நின்ற முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டார். ரோகித் வேண்டாமென்று நிராகரித்தார். இது பல முறை நடந்தது.

குல்தீப் யாதவ் வீசிய 42-வது ஓவரின் 4-வது பந்து தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் நிகிடியின் காலில் பட்டது. உடனே குல்தீப் யாதவ் எல்பிடபிள்யூ அப்பீல் செய்து கே.எல்.ராகுலிடம் முறையிட்டார். கே.எல்.ராகுல், ரோகித் சர்மாவிடம் கேட்க ரோகித் ரிவியூ எடுக்க வேண்டாமென்றார்.

அத்துடன் குல்தீப் யாதவை நோக்கி, ‘அவுட் இல்லை போ.. போ..’ என்ற வகையில் சைகை செய்தார். அடுத்த பந்தில் குல்தீப் மீண்டும் அப்பீல் கேட்க ரோகித் சர்மா சிரித்துக்கொண்டே ஏதோ கூறினார். இது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்