இளையோர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்ற இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 86 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-09-26 16:21 IST

கோப்புப்படம்

பிரிஸ்பேன்,

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதன் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 280 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 86 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 28.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 167 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் கிளான் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றி அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்