நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

நியூசிலாந்து - ஜிம்பாப்வே 2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்குகிறது.;

Update:2025-07-31 14:37 IST

image courtesy:ICC

புலவாயோ,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த 2-வது போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேக் எர்வின் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான பிரெண்டன் டெய்லர் ஏறக்குறைய 3.5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி விவரம் பின்வருமாறு:-

கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனகா சிவாங்கா, பென் கர்ரன், ட்ரெவர் குவாண்டு, ராய் கையா, தனுனுர்வா மகோனி, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, தபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்.

Tags:    

மேலும் செய்திகள்