புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட இந்தியா

ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.;

Update:2025-06-15 08:48 IST

கோப்புப்படம்

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்றில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதே போல் பெண்கள் பிரிவில் லண்டனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இந்திய அணிகள் இன்று மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்