உலகக்கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வெண்கலம் வென்று அசத்தல்

ஜோதி சுரேகா அரையிறுதியில் தோல்வியை தழுவினார்.;

Update:2025-10-19 01:38 IST

image courtesy:PTI

நன்ஜிங்,

உலகக் கோப்பை வில்வித்தை இறுதி சுற்று போட்டி சீனாவின் நன்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் 143-140 என்ற புள்ளி கணக்கில் அலெக்ஸ் ரூயிசை (அமெரிக்கா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் ஜோதி சுரேகா, ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை சந்தித்தார். இதில் ஜோதி சுரேகா 143-145 என்ற புள்ளி கணக்கில் ஆண்ட்ரியாவிடம் தோல்வியை தழுவினார்.

இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா 150-145 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் எல்லா கிப்சனை (இங்கிலாந்து) வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலகக்கோப்பை வில்வித்தை இறுதி சுற்றில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்