சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: தொடக்க சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை தொடங்கியது.;

Update:2025-08-08 12:56 IST

கோப்புப்படம்

சென்னை,

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை தொடங்கியது. 9 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவில் நடக்கிறது. 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 10 பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் அவோன்டர் லியாங்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜுன் எரிகைசி, 49-வது நகர்த்தலில் அவோன்டர் லியாங்கை வீழ்த்தினார்.

பிரணவ்-கார்த்திகேயன் முரளி (இருவரும் இந்தியா), அனிஷ் கிரி (நெதர்லாந்து)-ராய் ராப்சன் (அமெரிக்கா), விதித் குஜராத்தி (இந்தியா)-ஜோர்டென் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. மற்றொரு ஆட்டத்தில் வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), இந்திய வீரர் நிஹால் சரினை தோற்கடித்தார்.

சேலஞ்சர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆர்.வைஷாலி-இனியன் ஆகியோர் மோதினர். 57-வது காய் நகர்த்தலில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதேபோல் அபிமன்யு புரானிக்-அதிபன் மோதிய ஆட்டமும் டிரா ஆனது. மற்ற ஆட்டங்களில் லியோன் லூக் மென்டோன்கா, ஹர்ஷ்வர்தனையும், தீப்தயன் கோஷ், ஹரிகாவையும், பிரனேஷ், ஆர்யன் சோப்ராவையும் வென்றனர். இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்