சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி
இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.;
image courtesy:PTI
ஷென்சென்,
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், பிரான்சின் டோமா ஜூனியர் போபோ உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போபோ 21-11 மற்றும் 21-10 என்ற நேர்செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தினார். அதிர்ச்சி தோல்வி கண்ட லக்சயா சென் முதல் சுற்றோடு நடையை கட்டினார்.
இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை 24-22, 21-13 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜூனைடி ஆரிப்- ராய் கிங் யாப் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.