சீன ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது;
கோப்புப்படம்
பீஜிங்,
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய், ஜப்பானின் கோகி வடனாபேவை சந்தித்தார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 8-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த பிரனாய், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களில் அபாரமாக செயல்பட்டார். இதன் மூலம் அடுத்த இரு செட்களை 21-16, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.