சீன ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது;
கோப்புப்படம்
சாங்சோவ்,
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா - லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய சாத்விக் - சிராக் ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் பகாஸ் மவுலானா - லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.