ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட சாத்விக்-சிராக் ஜோடி

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது.;

Update:2025-09-14 14:00 IST

கோப்புப்படம்

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி கைப்பற்றியது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது மற்றும் 3வது செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாங் வெய் கெங்-வாங் சாங் ஜோடி 21-14, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Tags:    

மேலும் செய்திகள்