இந்த ஆண்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகுகிறேன் - பி.வி. சிந்து அறிவிப்பு
பி.வி.சிந்துக்கு கடந்த மாதம் காலில் காயம் ஏற்பட்டது.;
image courtesy:PTI
புதுடெல்லி,
ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த மாதம் காலில் காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணம் அடையாததால் டாக்டர்கள் மற்றும் தனது பயிற்சி குழுவினருடன் கலந்து ஆலோசித்த 30 வயதான சிந்து இந்த ஆண்டில் நடக்க இருக்கும் போட்டிகள் அனைத்திலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.