உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.;
குவான்ஜு,
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
இன்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த உலகின் நம்பர் 1 சாம்பியன் ஓஸ்நுர் குரே கிர்டியை ஷீத்தல் தேவி எதிர்கொண்டார் .
இதில் சிறப்பாக விளையாடி 146-143 என்ற கணக்கில் குரே கிர்டியை வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார். உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கைகள் இன்றி தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை ஷீத்தல் தேவி படைத்துள்ளார்.