சர்வதேச செஸ் போட்டி... தமிழக வீரர் இனியன் 'சாம்பியன்'
இனியன் 1½-½ என்ற புள்ளி கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.;
Image Courtesy: X (Twitter) / File Image
புதுடெல்லி,
2-வது டோலே ஓபன் சர்வதேச செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் எக்ஸ் - என் புரோவின்ஸ் நகரில் நடந்தது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 276 வீரர்கள் பங்கேற்றனர். 9-மற்றும் கடைசி சுற்று முடிவில் இந்தியாவின் பி.இனியன், போலந்தின் ஜன் மலெக் இருவரும் தலா 7½ புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.
இதையடுத்து ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதன் முதலாவது ஆட்டம் டிரா ஆனது. தொடர்ந்து நடந்த 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக ஆடிய இனியன், மலெக்கை வீழ்த்தினார்.
முடிவில் இனியன் 1½-½ என்ற புள்ளி கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 22 வயதான இனியன் ஈரோட்டை சேர்ந்தவர் ஆவார்.