பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
கடைசி சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரக்ஞானந்தா 2-வது இடம் பிடித்தார்.;
image courtesy:twitter/@PragueChess
பிராக்,
7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் எடிஸ் குரேலுடன் (துருக்கி) மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
மற்றொரு தமிழக நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா கடைசி சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். இதனால் பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன், அனிஷ் கிரி, வெய் யி (சீனா) ஆகியோருடன் இணைந்து 2-வது இடம் பெற்றார்.
தோல்வியே சந்திக்காத அரவிந்த் சிதம்பரம் 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.