புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் 2-வது வெற்றி
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.;
image courtesy:twitter/@ProKabaddi
விசாகப்பட்டினம்,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 21-வது லீக்கில் பெங்களூரு புல்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 40-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் 48-37 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.
இதில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் (இரவு 8 மணி) தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், 2-வது ஆட்டத்தில் (இரவு 9 மணி) குஜராத் ஜெயன்ட்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.