புரோ கபடி லீக்: புனேரி பால்டன் 10-வது வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதின.;
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 71-வது லீக் ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது. அரியானாவுக்கு இது 7-வது தோல்வியாகும். தெலுங்கு அணியில் பரத் 20 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-27 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை சாய்த்து 10-வது வெற்றியை சுவைத்தது.
இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி. யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.