புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 12-வது தோல்வி
12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.;
image courtesy:twitter/@ProKabaddi
புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 100-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி 44-43 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. கடைசி லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 12-வது தோல்வியாகும்.