புரோ கபடி லீக்: ஷூட்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி

இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும்.;

Update:2025-09-26 06:38 IST

image courtesy:twitter/@ProKabaddi

ஜெய்ப்பூர்,

12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவை பந்தாடியது.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

பின்னர் கடைபிடிக்கப்பட்ட ஷூட்-அவுட்டில் யோத்தாஸ் அணி 6-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

Tags:    

மேலும் செய்திகள்