ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
உலக ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
கெய்ரோ,
உலக ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-11, 12-14, 10-12 என்ற நேர் செட்டில் எகிப்தின் நதியன் எல்ஹம்மாமியிடம் தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
உலக ஜூனியர் சாம்பயின்ஷிப்பில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.