யு19 ஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய அணி 2 தங்கம் உள்பட 9 பதக்கங்கள் வென்று அசத்தல்

இந்திய வீராங்கனைகள் நிஷா மற்றும் முஸ்கன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.;

Update:2025-08-10 15:12 IST

கோப்புப்படம்

பாங்காக்,

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நிஷா (54 கிலோ) மற்றும் முஸ்கன் (57 கிலோ) தங்களது எடைப்பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினர். அதே நேரத்தில் 5 வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் களமிறங்கிய 10 வீராங்கனைகளில், ஒன்பது பேர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட 9 பதக்கங்களை இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்