மகளிர் செஸ் உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஹம்பி

பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-21 10:46 IST

கோப்புப்படம்

படுமி,

பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். 

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி காலிறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் விளையாடிய 2-வது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்