மகளிர் உலகக்கோப்பை கபடி: நடப்பு சாம்பியன் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி
இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதியது.;
image courtesy:twitter/@ProKabaddi
டாக்கா,
டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே தாய்லாந்து மற்றும் வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி கண்டிருந்தது.
இதனையடுத்து இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 63 -22 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியை பந்தாடி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏ பிரிவில் முதலிடத்தில் தொடருகிறது.