உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: தீபிகா குமாரி ஏமாற்றம்

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குவாங்ஷூ நகரில் நடந்து வருகிறது.;

Update:2025-09-12 14:55 IST

கோப்புப்படம்

குவாங்ஷூ,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குவாங்ஷூ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் தகுதி சுற்றில் 6-வது இடம் பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி நேரடியாக 3-வது சுற்றில் கால் பதித்தார்.

4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான தீபிகா குமாரி, இந்தோனேசியாவின் டயானந்தா சோய்ருனிசாவை சந்தித்தார். 5 செட் கொண்ட இந்த போட்டியில் தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான 15 வயதான கதா கதாகே தனது முதல் மூன்று சுற்று ஆட்டங்களில் முறையே பாத்திமா ஹூசைன்லி (அஜர்பைஜான்), தியா ரோஜர்ஸ் (இங்கிலாந்து), மிட்செல் குருப்பென் பாயர் (ஜெர்மனி) ஆகியோரை வரிசையாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கதா கதாகே அடுத்து ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான லிம் சி ஹியோனை (தென்கொரியா) சந்திக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்