உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் வெற்றி

ஆண்களுக்கான 70 கிலோ எடைபிரிவில் ஹிதேஷ் குலியா தோல்வியடைந்தார்.;

Update:2025-09-07 14:46 IST

image courtesy:PTI

லிவர்பூர்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூர் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் 51 கிலோ எடைபிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனீபர் லோசானோவை தோற்கடித்தார்.

இதில் நடந்த மற்ற ஆட்டங்களில் மகளிருக்கான 75 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், ஆண்களுக்கான 70 கிலோ எடைபிரிவில் ஹிதேஷ் குலியாவும் தோல்வியை தழுவினர்.

Tags:    

மேலும் செய்திகள்