உலக ஜூனியர் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியா தோல்வி

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.;

Update:2025-10-11 08:44 IST

கோப்புப்படம்

கவுகாத்தி,

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டில் இந்திய அணி நல்ல தொடக்கம் கண்டாலும் அதனை கடைசி வரை தக்கவைக்க முடியவில்லை.

முடிவில் இந்தியா 35-45, 21-45 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவிடம் வீழ்ந்தது. இந்த தோல்வியால் இந்திய அணி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்