உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: டெல்லியில் நாளை தொடக்கம்
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 5-ந்தேதி வரை வரை நடக்கிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 5-ந்தேதி வரை வரை நடக்கிறது.
இதில் 104 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடந்தது.
இந்திய அணியினர் தரம்பிர், பிரீத்தி பால் தலைமையில் அணிவகுத்து சென்றனர். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா போட்டியை தொடங்கி வைத்தார்.