உலக நீச்சல் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ரோகித் ஏமாற்றம்

தமிழகத்தைச் சேர்ந்த ரோகித் பெனடிக்சன் 53.92 வினாடிகளில் இலக்கை கடந்து 47-வது இடம் பிடித்தார்.;

Update:2025-08-02 19:28 IST

கோப்புப்படம் 

சிங்கப்பூர்,

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தின் முதல் சுற்றில் தேசிய சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த ரோகித் பெனடிக்சன் 53.92 வினாடிகளில் இலக்கை கடந்து 47-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இதில் முதல் 16 இடங்களை பிடித்த வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

பெண்களுக்கான 4x200 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் சீன அணி வெண்கலப்பதக்கம் வென்றது. அந்த அணியைச் சேர்ந்த 12 வயதான யு ஜிடிக்கும் வெண்கலம் கிடைத்தது. இந்த பிரிவின் இறுதிசுற்றில் யு ஜிடி நீந்தவில்லை. ஆனால் தொடக்க சுற்றில் களம் கண்டிருந்தார். அந்த அணியின் வீராங்கனை என்ற அடிப்படையில் வெண்கலம் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்