இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர், டாமி பால் உடன் மோதினார்.;

Update:2025-05-17 03:17 IST

image courtesy: Internazionali BNL d'Italia twitter

ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 'நம்பர் ஒன்' வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), டாமி பால் (அமெரிக்கா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என டாமி பால் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசுடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்