தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வருகிறது. பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை உள்பட 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் பரமத்தியில் 106 டிகிரி வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதன்படி, மதுரை விமான நிலையம் 106 டிகிரி,பாளையங்கோட்டை 104, திருத்தனி 103.45 தஞ்சை 102.2, சென்னை 101.66 சேலம் 100.94 பாரன்ஹீட் வேலூர் 105.08, மதுரை, ஈரோடு 104.54, கரூர் பரமத்தி 104.36 பாரன் ஹீட் ஆகும்.